Posts

Showing posts from May, 2017

எது மகிழ்ச்சி!!!

எதில் 😄மகிழ்ச்சி!!! ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால...

God Vs Science

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர் : ஆம், இருக்கிறது. மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை. அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ...

ஒவ்வொருவரும் அழகுதான்

தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது. என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான். “அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான் மாதவன். அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு, “சரிப்பா, பார்த்தி டலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது...” என்று பேச்சை இழுத்தாள். “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று பிடிவாதமாகச் சொன்னான் மாதவன். வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப...

கோபத்தின் கதை!

ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார். ”இனிமேல் கோபம்😡 வரும் போது எல்லாம் 🏡வீட்டின் பின் சுவரில் ஆணி 🔩அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது😔. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது🤗 என அவன்👦🏻 அப்பாவிடம்👨🏼 கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில்😌 ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள்🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் 😇அப்பாவை 👨🏼அழைத்து காட்டினான்🏢👈🏽. உடனே அப்பா சொன்னார் ஆணிகளை🔩 பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை🏢 என்ன செய்வாய்?🤕 உன் கோபம்😖 இது போல பலரை👩‍👩‍👧‍👦 காயப்படுத்தி இருக்கும்😒 அல்லவா? 📖படித்ததில் 💓பிடித்தது.. . 💞நான் யாரையாவது காயப்படுதிருந்தா மன்னிச்சிடுங்க..🙋🏽‍♂ 👉🏼நீங்க யாரையாவது காயப்படுத்திருந்தா மன்னிப்பு கேளுங்க..💐💝 😍😍😍

மனித நேயம் சாகவில்லை

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்...

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்..... இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்...... அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று...... இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவா...

விட்டுவிடு தூணை

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். "நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.என்றார். மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான். உடனே ஞானி, இதிலிருந்து என்னை எப்படியாவது என்னை விடுவித்து விடு என்றார். அதற்கு குடிகாரன், இவரென்ன முட்டாளா என்பது போல ஒரு பார்வை பார்த்தான். உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார். இது போல நாமும், கோபம், பொறாமை, சுயநலம், பழிவாங்கும் எண்ணம் எனும் தூண்களை இறுகப் பிடித்து வைத்திருக்கிறோம். விடு...